JSJ படையை மேலும் வலுப்படுத்துவதும், எதிர்கால தலைமைத்துவத்தை உருவாக்குவதும் ஆகும்

டிச. 29-

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையும் VAT 69 கமாண்டோவும் இணைந்து மன – உடல் வலிமைக்கான பயிற்சியை நடத்தியது. இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம் JSJ படையை மேலும் வலுப்படுத்துவதும், எதிர்கால தலைமைத்துவத்தை உருவாக்குவதும் ஆகும் எனக் குறிப்பிட்டுள்ளார் அரச மலேசியக் காவல் துறையின் துணைத் தலைவர் Datuk Seri Ayob Khan Mydin Pitchay.

இந்த பயிற்சி JSJ வீரர்களுக்கு கமாண்டோக்களின் சவாலான பயிற்சி முறையை அறிமுகப்படுத்துகிறது. காடுகளில் 7 நாட்கள் தங்கி இருக்கும் கடுமையான பயிற்சிகள், குழுப்பணி, ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பயிற்சி வீரர்களுக்கு கமாண்டோக்களின் கடினமான பணிகளைப் பற்றி உணர வைக்கிறது என்றார் அவர்.

உலு கிந்தாவில் நடந்த நிறைவு விழாவில் பேசிய Ayob Khan, இந்த பயிற்சி எதிர்காலத்தில் புக்கிட் அமானில் உள்ள மற்ற பிரிவுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார். இந்த பயிற்சி ” Banjaran Titiwangsa Camaraderie ” என்று அழைக்கப்படுகிறது.

கமாண்டோக்களின் நிபுணத்துவம் JSJ வீரர்களுக்கு புதிய சவால்களை அறிமுகப்படுத்தும் என்று குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர், Banjaran Titiwangsa Camaraderie கூறினார். மேலும், எதிர்காலத்தில் உணவு இல்லாமல் உயிர்வாழும் பயிற்சிகளை வழங்குவதற்கான திட்டமும் பரிசீலனையில் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS