டிச. 29-
மலேசியாவில் ஹலால் சான்றிதழ் பெறுவது தங்களின் சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே என்று Jakim உறுதிப்படுத்தியுள்ளது. அமைச்சரவையின் முடிவின்படி, உணவு – பானக் கூட உரிமையாளர்கள் ஹலால் சான்றிதழ் பெற எந்த சட்டப்பூர்வ கட்டாயமும் இல்லை என JAKIM இன் தலைமை இயக்குநர் Sirajuddin Suhaimee தெரிவித்தார்.
ஊராட்சி மன்ற அமலாக்க அதிகாரிகள் ஹலால் சான்றிதழை கட்டாயமாக்கும் நடைமுறை குறித்து Jakim விளக்கம் கேட்டுள்ளது. சான்றிதழ் பெறுவது தரநிலைகளைப் பின்பற்றத் தயாராக இருக்கும் அனைவருக்கும் திறந்திருக்கும் என்றும், இது சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் மதிப்பைக் கொடுக்கும் என்றும் Jakim கூறியுள்ளது.
வர்த்தக விவகார ஆணையின்படி, Jakim க்கும் மாநில மத அதிகாரிகளுக்கும் ஹலால் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் உள்ளது. கடை உரிமையாளர்கள் சான்றிதழ் பெற Jakim தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.
கிளாந்தானில், வணிக உரிம புதுப்பித்தலுக்கு ஹலால் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது முஸ்லிம் அல்லாத வணிகர்களுக்கு கட்டாயமில்லை, ஆனால் அவர்கள் முஸ்லிம் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் விற்றால் சான்றிதழ் பெற வேண்டும் என்பது கிளாந்தானில் நடப்பில் இருக்கும் விதிமுறையாகும்.