PAS கட்சியின் இளைஞர் தலைவர் Mohd Afnan Hamimi Taib Azamudden கூறியுள்ளார்

டிச. 30-

இளைஞர், விளையாட்டு அமைச்சர் ஹ ன்னா யோவுக்கு எதிராக அவதூறு வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வரும் முன்னாள் விரிவுரையாளர் Kamarul Zaman Yusoffக்கு இளைஞர் PAS ஆதரவு தெரிவித்துள்ளது. கமருலின் கருத்துக்கள் உண்மை அடிப்படையிலான பகுப்பாய்வு என்றும், அது அவதூறு குற்றச்சாட்டு அல்ல என்றும் PAS கட்சியின் இளைஞர் தலைவர் Mohd Afnan Hamimi Taib Azamudden கூறியுள்ளார்.

Kamarul வெளியிட்ட கருத்துக்கள் கூட்டரசு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ மதமான இஸ்லாத்தின் நிலைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், மலாய்-இஸ்லாமிய உணர்வுகளைத் சீண்டுவதாகவும் Mohd Afnan கருதுவதாகக் குறிப்பிட்டார். மேலும், இது நாட்டின் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் காவல் துறைத் தலைவர் மூசா ஹசன், ‘கிறிஸ்தவ நாடு’ என்று கூறியதற்கு எதிராக ஹன்னா யோ வழக்கு தொடரவில்லை என்றும், இது கமருலின் வாதத்திற்கு சாதகமாக அமையும் என்றும் PAS கட்சியின் இளைஞர் அணி தெரிவித்துள்ளது.

கமருல் கடந்த 2017 இல் வெளியிட்ட முகநூல் பதிவுகளில் ஹன்னா யோ கிறிஸ்தவத்தைப் பரப்புவதற்கான நோக்கத்தைக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த வழக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

WATCH OUR LATEST NEWS