மனநல சோதனை மேற்கொள்வதற்கு உத்தரவு

குளுவாங், ஜன.2-


ஜோகூர், குளுவாங், லாமான் கிரேயேட்டிப் கம்போங் மிலாயுவில் உள்ள பொது கழிப்பறையில் வர்த்தகப் பெண்மணி ஒருவரை மானப்பங்கம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபரை, மன நல சோதனைக்கு உட்படுத்துவதற்கு அவரை பெர்மாய் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கமாறு குளுவாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முகமட் சுபோர் என்ற அந்த நபருக்கு எதிரான வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது மாஜிஸ்திரேட் முஸ்தாகிம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி 24 வயது மாதுவை பொது கழிப்பறையில் மானங்கம் செய்ததாக 34 வயதுடைய அந்த நபர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

WATCH OUR LATEST NEWS