அனைத்து அமைச்சுகளும் கவனம் செலுத்த வேண்டும்

ஜன.6-

2024 மலேசியாவுக்கு வருகை புரியும் ஆண்டு திட்டத்தை முன்னிட்டு, சுற்றுலா, முதலீடு, பொருளாதாரம் ஆகிய துறைகளின் வளர்ச்சியை மேம்படுத்துவதில் அனைத்து அமைச்சுகளும் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார். இது மலேசியாவை உலகளாவிய சுற்றுலா மையமாக நிலைநிறுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் ஒரு முயற்சியாகும் என்றார் அவர்.

இந்த முயற்சியின் மூலம், 35.6 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து 147.1 பில்லியன் ரிங்கிட் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களும் இந்த முயற்சியில் சமமாக பங்கேற்று பயனடைய வேண்டும் என்றும், எந்தப் பகுதியும் பின்தங்கி விடக்கூடாது என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த பிரச்சார தொடக்க விழாவில் துணைப் பிரதமர்களான Datuk Seri Ahmad Zahid Hamidi, Datuk Seri Fadillah Yusof, சுற்றுலா , கலை , அண்பாட்டு அமைச்சர் Datuk Seri Tiong King Sing ஆகியொரும் கலந்து கொண்டனர்.

WATCH OUR LATEST NEWS