PUSPAKOMமில் வாகன சோதனை நடைமுறைகள் மேம்படுத்தப்படும்

ஜன.6-

கனரக வாகனங்களின் பாதுகாப்புப் பிரச்சினைகளைக் கையாள போக்குவரத்து அமைச்சு சிறப்புப் பணிக்குழுவை அமைக்க இருப்பதாக, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார். இந்தக் குழுவுக்குப் போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் Jana Santhiran தலைமை ஏற்பார் என குறிப்பிட்டார். சாலைப் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பயனுள்ள வியூகத்தை வகுக்க பல்வேறு தரப்பினரும் இதில் ஈடுபடுவார்கள் என்றார்.

சமீபத்திய விபத்துகளைத் தொடர்ந்து, PUSPAKOMமில் வாகன சோதனை நடைமுறைகள் மேம்படுத்தப்படும். குறிப்பாக சக்கரம், பிரேக் அமைப்பு ஆகிய முக்கியப் பாதுகாப்பு அம்சங்கள் கவனமாக ஆய்வு செய்யப்படும். மேலும், அதிக சுமை சுமக்கும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டங்கள் மறுபரிசீலனை செய்யப்படும் எனவும் அந்தோணி லோக் தெரிவித்தார்.

போக்குவரத்துத் துறையை மேம்படுத்தவும், மக்களுக்கு சிறந்த சேவை வழங்கவும் போக்குவரத்து அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும். செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, சேவை டிஜிட்டல் மயமாக்கல், மேம்பட்ட கண்காணிப்பு அமைப்புகள் போன்ற தொழில்நுட்ப மேம்பாடுகள் இதில் அடங்கும் என்றார் அவர்.

WATCH OUR LATEST NEWS