புத்ராஜெயா, ஜன.6-
மலேசியாவில் செயல்படுவதற்கு டெலிகிராமிற்கு லைசென்ஸ் கிடைத்துள்ளதாக தொடர்புத்துறை அமைச்சர் ஃபாஹ்மி பாட்ஸில் தெரிவித்துள்ளார்.
WeChat- ட்டிற்கு Tencent நிறுவனத்திற்கும், டிக்டோக்கிற்கு ByteDance நிறுவனத்திற்கும் அடுத்து தற்போது டெலிகிராமிற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக ஃபாஹ்மி விளக்கினார்.
இதன்மூலம் சமூக வலைத்தளங்களில் சேவையை வழங்கும் மூன்றாவது நிறுவனமான டெலிகிராம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.