இலக்கவியல் மேம்பாட்டுத் திட்டங்களின் மலேசியா-இந்தியாவுடனான ஒத்துழைப்பு வலுப்பெறும்

கோலாலம்பூர், ஜன.6-


இந்தியா, ஒடிசாவில் ஜனவரி 8-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நடைபெறவிருக்கும் 18-வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டில் இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ கலந்து கொள்ளவிருக்கிறார்.

ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புபனேஸ்வரில்
உலகளாவிய புலம்பெயர்ந்த இந்தியர்களுக்காக நடைபெறும் பிரவாசி மாநாட்டில் இந்திய தலைவர்களும் அறிஞர்களும் பங்கேற்கவிருக்கின்றனர்.

உலகெங்கும் பரவிக் கிடக்கும் இந்தியர்களை இந்த மாநாடு ஒன்றிணைப்பதோடு இந்திய அரசாங்கத்தோடு இணக்கத்தை ஏற்படுத்துகிறது.

மலேசியாவில் இலக்கவியல் அமைச்சு புதிதான ஓர் அமைச்சானாலும், இந்தியாவோடு இலக்கவியல் துறை சார்ந்த முன்னெடுப்புகளில் மலேசியா கைகோர்க்க, தாம் பேச்சு வார்த்தை நடத்தவிருப்பதாக கோபிந்த் சிங் தெரிவித்தார்.

தம்முடைய இந்தப்பயணம், மலேசியா-இந்தியா இடையே MIDC எனப்படும் டிஜிட்டல் கவுன்சில் அமைப்பை வலுப்படுத்தும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் வழி இருதரப்பு இலக்கவியல், வர்த்தகம், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள தொழில்நுட்ப வல்லுனர்களின் ஆற்றலை அதிகரிக்கும்.

அறிவியல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா முன்னோடி நாடுகளில் ஒன்று. தற்போது நமது நாடு தெற்கிழக்காசியாவின் இலக்கவியல் மேம்பாட்டு மையமாக உருவாகியிருக்கும் நிலையில், பல நாட்டு தொழில்நுட்ப ஜாம்பவான்கள் நமது நாட்டில் தொடர்ச்சியாக முதலீடு செய்ய முனைகின்றன. இது வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதோடு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்று இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் கோபிந்த் சிங் இதனை தெரிவித்தார்.

இது, இந்தியாவிற்கு தனது 2-வது அதிகாரப்பூர்வ பயணமாகும். கடந்த வருடம், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமோடு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்ட போது, மலேசியா-இந்தியாவுக்கிமிடையே உடன்படிக்கை ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போது, இந்தியாவின் பெரும் தொழில் நுட்ப நிறுவனங்களயும் இலக்கவியல் துறைசார் வல்லுனர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியதுதாக கோபிந் சிங் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS