விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர் , மூவர் உயிர் தப்பினர்

ஜன.7-

அடையாளம் தெரியாத கார் ஒன்று டேங்கர் லாரியின் பாதையில் திடீரென நுழைந்ததில் கோலா சிலாங்கூர், Pasir Penambangகில் நடந்த டேங்கர் லாரி, Toyota Alphard , Proton Saga ஆகிய வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது. அடையாளம் தெரியாத அந்தக் காரை, லாரி ஓட்டுநர் தவிர்க்க முயன்றதில், மற்ற இரண்டு வாகனங்கள் மீது மோதியுள்ளார் என கோல சிலாங்கூர் மாவட்டக் காவல் துறைடின் தலைவர் Azaharudin Tajudin கூறினார்.

இந்த விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர் , மூவர் உயிர் தப்பினர். தீயணைப்புத் துறையினர் பிற்பகல் 2.19 மணிக்கு தகவல் பெற்று உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிட்யில் ஈடுபட்டனர். இந்த விபத்து சாலை போக்குவரத்து சட்டம் 1987 பிரிவு 43 (1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

இந்த விபத்து குறித்த காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது. அதில், அடையாளம் தெரியாத கார் ஒன்று முந்திச் செல்ல முயன்றது தெரிய வந்துள்ளது.

WATCH OUR LATEST NEWS