ஜன.7-
மனிதவள அமைச்சு, 2025 ஆம் ஆண்டில் தொழிலாளர் நலனிலும் மனித வள மேம்பாட்டிலும் கவனம் செலுத்துகிறது. பயிற்சித் திட்டங்கள், மனிதவளக் கொள்கை மேம்பாடு, சட்ட சீர்திருத்தங்கள் ஆகியவை மூலம் தொழிலாளர்களின் திறன்களை மேம்படுத்தவும் உரிமைகளைப் பாதுகாக்கவும் அமைச்சு முழு வீச்சில் இறங்கவுள்ளதாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அமைச்சின் முக்கிய முயற்சிகளில், தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளித்தல், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வேலை வாய்ப்புகளை அதிகரித்தல், தற்போதைய நிலவரங்களுக்கு ஏற்ப 28 சட்டங்களை சீர்திருத்துதல் ஆகியவை இதில் அடங்கும் என மனிதவள அமைச்சு கூறியது. மேலும், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வலுப்படுத்துவதிலும் தொழிற்சங்கங்களுடனான உறவை மேம்படுத்துவதிலும் அமைச்சு கவனம் செலுத்துவதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த முன்னெடுப்புகள் நாட்டின் போட்டித்தன்மையை வலுப்படுத்தும், தொழிலாளர் நலனை உறுதி செய்யும், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்று மனிதவள அமைச்சு நம்புவதாகத் தெரிவித்தது. சேவைத் திறனை மேம்படுத்துவதற்கான மறுசீரமைப்பு முயற்சிகளும் இதில் அடங்குவதாக அமைச்சு விவரித்தது.