ஜன.7-
AirAsia X Bhd நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் விமானிக்கு தொழில்துறை நீதிமன்றம் 5 இலட்சத்து 11 ஆயிரத்து 200 ரிங்கிட் இழப்பீடு வழங்கியுள்ளது. அந்தப் பணிநீக்கம் நியாயமற்றது என்று நீதிமன்றத் தலைவர் D Paramalingam தீர்ப்பளித்தார். நிறுவனம் பயன்படுத்திய எனப்படும் LIFO – LAST IN – FIRST OUT கொள்கை, அதாவது ‘கடைசியாக நுழைந்தவர், முதலில் வெளியேறுபவர்’கொள்கையை விட சிறந்த முறை இல்லை என்று Paramalingam கூறினார்.
கோவிட்-19 பொது முடக்கத்தின் போது அனைத்து விமானங்களும் இரத்து செய்யப்பட்ட நிலையில், அந்த நேரத்தில் பணிநீக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட தேர்வு செயல்முறை தன்னிச்சையானது என்று கண்டறியப்பட்டது. மேலும், விமானியின் ஒழுங்குப் பதிவின் அடிப்படையில் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்றும், வேறு காரணத்திற்காக அல்ல என்றும் Paramalingam குறிப்பிட்டார்.
விமானிக்கு 1 இலட்சத்து 98 ஆயிரம் ரிங்கிட் இழப்பீடும், 4 இலட்சத்து 32 ஆயிரம் ரிங்கிட் நிலுவைத் தொகையும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், பணிநீக்கத்திற்குப் பிறகான சம்பளத்திற்காக 1 இலட்சத்து 18 ஆயிரத்து 800 ரிங்கிட் கழிக்கப்பட்டது. நிறுவனத்தின் சாட்சியம் தெளிவற்றதாகவும், விமானப் பயணம் இரத்து செய்யப்பட்டதா அல்லது இடைநிறுத்தப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் நீதிமன்றம் கூறியது.