புக்கிட் மெர்தாஜம், ஜன.6-
தன் உறவினரான 34 வயதுப் பெண்ணைக் கத்தியால் குத்தி காயப்படுத்தியதாகப் பதின்ம வயதுப் பெண் ஒருவருக்கு எதிராக புக்கிட் மெர்தாஜம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் முகமது ஹரித் முகமது மஸ்லான் முன்னிலையில் தனக்கெதிராக கொண்டுவரப்பட்ட இக்குற்றச்சாட்டை 14 வயதுடைய அப்பெண் மறுத்து விசாரணை கோரினார்.
கடந்த ஜனவரி 3 ஆம் தேதி காலை 11.30 மணியளவில் செபராங் பெராய் தெங்கா, ஜாலான் பிறை ஜெயாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அந்த இளம் பெண்ணுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் 324வது பிரிவின் கீழ் இந்தக் குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டுள்ளது.