கோலாலம்பூர், ஜன.6-
நஜீப்பை வீட்டுக்காவலில் வைப்பதற்கு 16 ஆவது மாமன்னரின் அரசாணை உத்தரவு இருப்பதாக அப்பீல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்விவகாரத்தை விவாதிப்பதற்கு மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் சிறப்புக்கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அரசாங்க சார்பற்ற அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அரசாணை உத்தரவை மூடிமறைக்கும் செயல்கள் நடந்துள்ளனவா? இதற்கு யார் பொறுப்புதாரி, அவர்கள் மீது என்ன நடவடிக்கை என்பது குறித்து விவாதிப்பதற்கு மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் தனது சிறப்புக்கூட்த்தை நடத்த வேண்டும் என்று உம்மா அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.