ஜன.7-
கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி பலதரப்பட்ட போதைப்பொருளை கடத்தியதாக ஒரு காதல் ஜோடியினர் ஜோகூர் பாரு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்ட்டனர்.
32 மற்றும் 34 வயதுடைய அந்த காதல் ஜோடி மீது எந்தவொரு வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை. அவர்களுக்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி ஸ்கூடாய், பெர்சியாரான் முத்தியாரா மாஸில் அவ்விருவரும் 14.42 கிலோ எடை கொண்ட பலதரப்பட்ட போதைப்பொருளை கடத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.