ஜன.7-
சிப்பாங்கில் கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி முதல் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 17 வயது இளம்பெண், நேற்று இரவு 11.15 மணியளவில் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
செராஸ், பத்து செம்பிலானில் உள்ள ஓர் உணவகத்தில் Nurul Fateha Nabilah Mohd Zailani என்ற அந்த இளம் பெண் கண்டுபிடிக்கப்பட்டார்.
அவர் காணமல் போன சமயம் தோழியின் வீட்டில் இருந்ததாக சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி Norhizam Bahaman ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த டிசம்பர் 31 அன்று நூருலின் அத்தை அளித்த புகாரைத் தொடர்ந்து அப்பெண் காவல்துறையினரால் தேடப்பட்டு வருவதாக ஜனவரி 4 ஆம் தேதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.