இயங்கலை மூலம் கல்வியைத் தொடர்வர்

ஜன.7-

நேற்று நிகழ்ந்த தீ விபத்தில் பெரும் சேதத்திற்கு இலக்கான பேரா, ஆயர் தாவார் தோட்ட தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த 32 மாணவர்கள் நாளை புதன்கிழமை முதல் வீட்டிலிருந்து இயங்கலை வாயிலாக கல்விக்கற்பர் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஏ. சிவநேசன் தெரிவித்தார்.

2024 கல்வியாண்டு அடுத்த வாரம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவுக்கு வரும் வரையில் ஜனவரி 17 ஆம் தேதி வரை அவர்கள் வீட்டிலிருந்து தங்கள் கல்வியைத் தொடர்வர் என்று சிவநேசன் குறிப்பிட்டார்.

தீயில் சேதமுற்ற ஆயர் தாவார் தோட்ட தமிழ்ப்பள்ளிக்கு இன்று நேரடி வருகை புரிந்து, பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் சிவநேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS