ஜன.7-
போதைப்பொருளை கடத்தியது, அதனை புதைத்து வைத்திருந்தது ஆகிய குற்றங்களுக்காக முன்னாள் விமானப் பணியாளருக்கும், அவரின் இரு நண்பர்களுக்கும் கோலாலம்பூத்ர உயர் நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை மற்றும் 18 பிரம்படித் தண்டனை விதித்தது.
முன்னாள் விமானப் பணியாளரான 40 வயது கே. கார்த்திக், தொழிற்சாலை ஒன்றின் முன்னாள் நிர்வாகியான 35 வயது சி.பிரவின் மற்றும் ஒது முன்னாள் விற்பனை பணியாளரான 26 வயது முகமட் அஃபிக் முகமட் அலி ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேதகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி டத்தோ அஸார் அப்துல் ஹமிட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
இந்த மூவரும் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ், பந்தாய் செண்ரலில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிக்கப்பட்டது.