ஜன. 8-
லாயாங்-லாயாங் ஐலேண்ட் ரிசார்ட் Sdn Bhd நிறுவனத்தின் உரிமத்தை இரத்து செய்துள்ளது சுற்றுலா, கலை. பண்பாட்டு அமைச்சு. 1992 ஆம் ஆண்டு சுற்றுலா தொழில் சட்டம் பிரிவு 8 இன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்கூபா டைவிங் அடவடிக்கைகளுக்கு முன்பதிவு செய்த சுற்றுலாப் பயணிகளின் வைப்புத் தொகையைத் திருப்பித் தரத் தவறியதாக இந்த ரிசார்ட், ஈது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உரிமம் பெற்ற சுற்றுலாத்தல நடத்துநர்கள் சட்ட விதிகளை மீறுவதை அமைச்சகம் தீவிரமாகக் கருதுவதாக அதன் சுற்றுலா ஆணையர் Roslan Abdul Rahman கூறினார். மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சபாவில் உள்ள இந்த ரிசார்ட், கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 100 க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட 50 விழுக்காடு வைப்புத் தொகையைத் திருப்பித் தரவில்லை என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டின் விளைவாகவே அமைச்சு இந்த ரிசார்ட்டின் உரிமத்தை இரத்து செய்துள்ளது.