கோலாலம்பூர், ஜன.8-
வர்த்தக வாகனங்களை பரிசோதிக்கும் அரசாங்க ஏஜென்சி ஒன்றில் நடந்த லஞ்ச ஊழல் தொடர்பில் அந்த ஏஜென்சியின் இயக்குநர் மற்றும் நிறுவனம் ஒன்றின் மூன்று இயக்குநர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இன்று கைது செய்துள்ளது
வர்த்தக வாகனங்களுக்கு ரோட்டெக்ஸ் புதுப்பிக்கப்படுவதற்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக அந்த வாகனங்கள் சம்பந்தப்பட்ட அரசாங்க ஏஜென்சியில் பரிசோதனை உட்பட்டு அங்கீகார சான்றிதழ் பெற வேண்டும்.
அந்த சான்றிதழ்களை அங்கீகரிப்பதில் மிகப்பெரிய ஊழல் நடத்து இருப்பதைத் தொடர்ந்து அதன் இயக்குநர் உட்பட நால்வர் SPRM மினால் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.