இந்திய சமுதாயத்தை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் பதவி உயர்த்தப்பட்டனர்

பினாங்கு, ஜன. 8-


பினாங்கு மாநிலத்தில் அரச மலேசியப் போலீஸ் படையில் பணியாற்றி வரும் போலீஸ் அதிகாரிகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கி, தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி, போலீஸ் படைக்கு பெருமை சேர்த்துள்ள அதிகாரிகள் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

இன்று ஜனவரி 8 ஆம் தேதி பினாங்கு போலீஸ் தலைமையகத்தின் டேவான் முத்தியாரா மண்டபத்தில் பினாங்கு மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்ஸா பின் ஹாஜி அகமட் தலைமையில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான ஜனவரி மாத பேரணியில் போலீஸ் படையின் நம்பிக்கையை உயர்த்திப் பிடித்த அதிகாரிகள், இன்ஸ்பெக்டர் பதவிலிருந்து அசிஸ்டண்ட் சூப்ரிடெண்டன்ட் போலீஸ் எனும் ஏஸ்பி அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டு, கெளரவிக்கப்பட்டனர்.

அவர்களின் நான்கு இந்திய போலீஸ் அதிகாரிகளும் அடங்குவர். அரச மலேசிய போலீஸ் படையில் கடந்த 14 ஆண்டுகளாக நம்கத்தன்மையுடன் சேவையாற்றி வரும் ஏஎஸ்பி லோகநாதன் கிருஷ்ணன், 25 ஆண்டுகளாக திறன்மிக்க சேவையை வழங்கி வரும் ஏஎஸ்பி யோகேஸ்வரன் கணேசன், 14 ஆண்டுகளாக சீரிய முறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் ஏஎஸ்பி காளிதாசன் வி. ராஜகுமார் மற்றும் 14 ஆண்டு காலமாக ஆற்றல்மிக்க சேவையை வழங்கி வரும் ஏஎஸ்பி ஜி. கோபிநாத் கோவிந்தன் ஆகியோரே ஏஎஸ்பி அந்தஸ்துக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ள இந்திய அதிகாரிகள் ஆவர்.
பதவி உயர்த்தப்பட்டுள்ள உயர் அதிகாரிகளுக்கு பினாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹம்ஸா அகமட் Ahmad , பாராட்டுப்பத்திரமும் நற்சான்றிதழும் வழங்கி கெளரவித்தார்.

WATCH OUR LATEST NEWS