புக்கிட் மெர்தாஜம், ஜன.8-
மின்சாரக் கேபல் கம்பியில் சிக்கி மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் பரிதாபமாக மாண்டார். இச்சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் புக்கிட் மெர்தாஜம், ஜாலான் கூலிமில் நிகழ்ந்தது.
பாரந்தூக்கி லோரியில் சிக்கிய கேபள் கம்பி, சாலையிலும் தொங்கி கிடந்ததை அறியாத அந்த மோட்டார் சைக்கிளோட்டி, கம்பிக்கு மத்தியில் சிக்கி சம்பவ இடத்திலேயே மாண்டதாக செபராங் பிறை தெங்கா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ஹெல்மி அரிஸ் தெரிவித்தார்.