ஜன.9-
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 27.0 கிலோமீட்டர், கூலாயில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் ஒரு முதியவர் உட்பட இருவர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.
இன்று காலை 6.37 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் ஒரு சுற்றுலா பேருந்தும், ஒன்பது பயணிகளுடன் வந்த மற்றொரு சுற்றுலா சம்பந்தப்பட்டு இருந்ததாக கூலாய் தீயணைப்பு நிலைய அதிகாரி கமாண்டர் அவாங் இஸ்மாயில் தெரிவித்தார்.
காயமுற்ற இருவரும் சுற்றுலாப் பேருந்து பயணிகள் ஆவர் என்று அவர் குறிப்பிட்டார்.