சுங்கை டாமன்சாரா ஆற்றில் ஆடவர் சடலம் மீட்பு

ஜன.9-

ஷா ஆலாம், செக்‌ஷன் 22, Xin Hua Warehouse கட்டடத்திற்கு அருகில் சுங்கை டாமன்சாரா ஆற்றில் நேற்று காலை 11 மணியளவில் ஆடவர் ஒருவரின் சடலத்தை போலீசார் மீட்டனர்.

அந்த நபரிடம் எந்தவொரு அடையாள ஆவணமும் இல்லாததால் அவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்று ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

மலேசியர்களுக்கு காணப்படும் BCG தடுப்புபூசி அடையாளம் அவரின் உடலில் காணப்படவில்லை. அந்த நபர் சிவப்பு நிற டி சட்டை மற்றும் முழு காற்சட்டை அணிந்திருந்துள்ளார். விசாரணை தொடர்வதாக இக்பால் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS