ஜன.9-
தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா 2025 வரும் ஜனவரி 19 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பத்துமலை திருத்தலத்தில் பிற்பகல் 3 மணி முதல் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானமும், மலேசிய இந்து ஆலய – இந்து அமைப்புகளின் ஒருங்கிணைப்பு பேரவையான மஹிமாவும் இணைத்து நடத்தும் இந்நிகழ்விற்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ S.A. விக்னேஸ்வரன் மற்றும் மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சவணன் ஆகியோர் சிறப்பு வருகை புரியவிருக்கின்றனர்.
பொங்கல் வைத்தல், ஆடல்- பாடல்,பாரம்பரிய நிகழ்வுகள், கிராமிய நிகழ்ச்சிகளுடன் பல்வேறு போட்டி அங்கங்களும் நடைபெறவிருக்கின்றன.
தமிழர்களின் பண்பாட்டையும், கலாச்சாரத்தின் மேன்மையும் முன்நிறுத்தி கொண்டாடப்படும் தேசிய ஒற்றுமைப் பொங்கல் விழா 2025 க்கு, அனைவரும் திரண்டு வருகை தருமாறு தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் R. நடராஜாவும், மஹிமா தலைவர் டத்தோ என். சிவகுமாரும் அழைப்பு விடுத்துள்ளனர்.