ஜோகூர் பாருவில் ஓர் உணவகத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திலும், நெகிரி செம்பிலானில் முகமூடி அணிந்த கும்பல் நடத்திய தாக்குதல் சம்பவத்திலும், ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கக்கூடும் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும் முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றக் குழுக்களின் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது என ஹேசியக் காவல் துறைத் தலைவர் Tan Sri Razarudin Husain தெரிவித்தார்.
இந்த சம்பவங்கள் தன்னிச்சையாக நடைபெறவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் புரிந்த கும்பலின் இலக்காக இருந்திருக்கலாம் என்றும் காவல் துறை கருதுகின்றனர். பொது அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குற்றவாளிகளை விரைவில் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்துவோம் என்று Razarudin Husain உறுதியளித்துள்ளார்.