ஜன.10-
ஜோகூர், Lenga பகுதியில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவரும் இந்தோனேசியர் ஒருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து Jalan Kampung Gombang / Kampung Batu 28 சந்திப்பில் நேற்று மாலை 5 மணியளவில் நிகழ்ந்துள்ளது. இந்தோனேசியர் Lengaவிலிருந்து Gombang நோக்கி சென்று கொண்டிருந்த போது, முதியவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென குறுக்கிட்டதால் விபத்து ஏற்பட்டதாக மூவார் மாவட்டக் காவல் துறைத் தலைவர் Asisten Komisioner Raiz Mukhliz Azman Aziz தெரிவித்தார்.
முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், இந்தோனேசியர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காவல்; துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.