ஜன.10-
பாக்கிஸ்தான் மத்திய ஆசிய பகுதிகளுக்கு செம்பனை ஏற்றுமதி செய்வதற்கான ஒரு முக்கிய மையமாக மாறக்கூடிய சாத்தியம் உள்ளதாக மலேசியா நம்புகிறது. தோட்டக்கலை , மூலப்பொருட்கள் அமைச்சர் Datuk Seri Johari Abdul Ghani, பாக்கிஸ்தான் மத்திய ஆசியாவில் நிலையான செம்பனை விநியோகத்தை உறுதி செய்வதில் முக்கிய பங்காற்ற முடியும் என்று தெரிவித்தார். Afganistan, Takistan உட்பட 185 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட ஐந்து நாடுகளுக்கு செம்பனை ஏற்றுமதி செய்ய இது மலேசியாவிற்கு அதிக வாய்ப்புகளை வழங்கும்.
பாக்கிஸ்தானின் முக்கிய துறைமுகமான Port Qasim ஆணையத்தில் நடவடிக்கைகளை பார்வையிட்டார் அமைச்சர் ஜோஹாரி. துறைமுகத்தின் தலைவர் Rear Admiral Syed Moazzam Ilyas ஐ சந்தித்து இரு நாடுகளின் உறவிலும் தளவாட துறையிலும் உள்ள வாய்ப்புகள் குறித்து விவாதித்தார். மேலும், போர்ட் காசிமில் செயல்படும் மலேசியா-பாக்கிஸ்தான் கூட்டு நிறுவனங்களையும் அவர் பார்வையிட்டார்.