இரண்டு முக்கிய சாலைகள் இலகுரக வாகனப் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன

ஜன.10-

ஜோகூர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, கோத்தா திங்கி பகுதியில் உள்ள இரண்டு முக்கிய சாலைகள் இலகுரக வாகனப் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளன. சிம்பாங் சுங்கை மாஸ் அருகே உள்ள Jalan Kota Tinggi-Sungai Rengit சாலையும், Ladang Siang அருகே உள்ள Bandar Penawar-Tanjung Balau சாலையும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளன. கனரக வாகனங்கள் மட்டும் தற்காலிகமாக அனுமதிக்கப்படுகின்றன.

பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கோத்தா திங்கி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. Bandar Mas-Lok Heng வழியாக FELDA சுங்கை மாஸ் , Jalan Kenanga, Taman Sri Penawar வழியாக மாற்று பாதைகள் வழங்கப்பட்டுள்ளன. ஜோகூர் மாநிலம் முழுவதும் தொடர் மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ள பகுதிகளில் பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

WATCH OUR LATEST NEWS