ஜன.10-
சரவாக், பினாங்கு ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சோதனையில், 17 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான குத்தகை மோசடி தொடர்பாக ஒரு ஒளிபரப்பு நிறுவனத்தின் இயக்குநர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்னென தேசியக் காவல் துறைத் தலைவர் Razarudin Husain தெரிவித்தார். Op Ragada என்ற சோதனையில், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன, வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன, மேலும் பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
கடந்த ஆண்டு அக்டோபரில் கிடைத்த தகவலின் அடிப்படையில், 2017 முதல் 2024 வரை சந்தேகத்திற்கிடமான பணப் பரிமாற்றங்கள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடியில் ஈடுபட்டவர்கள் பணமோசடி, நம்பிக்கை மீறல், குத்தகை மோசடி, தங்களுக்குள்ளேயே குத்தகைர்களை வழங்கியது போன்ற குற்றங்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவர்.