ஜன.10-
இளைஞர்கள் மத்தியில் ஊழலையும் அதிகார முறைகேடல்களையும் வெறுக்கும் மனப்பான்மை அவசியம் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். சிரமப்படும் மக்கள், கல்வியின் தரம் , கிராமப்புற இளைஞர்களின் நலன் போன்ற முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் பங்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். ஊழலுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை அவர் தொடர்ந்து மேற்கொள்வார் என்றும் தெரிவித்தார்.
வெளிநாட்டு வங்கிகளில் ஏராளமான சொத்துக்களை வைத்திருப்பவர்கள் அவற்றை நாட்டுக்கு திருப்பிச் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இளைஞர்களின் திறனையும், நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அவர்களின் பங்கையும் அவர் பெரிதும் நம்புவதாக தெரிவித்தார். ஊழல் நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என்பதை பிரதமர் குறிப்பிட்டார்.