ஜன.10-
அமைச்சர் அசலினா ஒத்மான் சைத் மன்னிப்பு வாரியத்தில் உறுப்பினராக இல்லை என்றும், எந்த கைதியின் மன்னிப்பு நடவடிக்கையிலும் அவர் ஈடுபடவில்லை என்றும் பிரதமர் துறை தெளிவுபடுத்தியுள்ளது. மன்னிப்பு வாரியத்திற்கு செயலகமாக மட்டுமே செயல்படுவதாக சட்ட விவகாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மாநிலத்திலும் சுல்தான் அல்லது மாநில ஆட்சியாளர் தலைமையில் மன்னிப்பு வாரியம் செயல்படுகிறது. கூட்டரசு பிரதேசங்களுக்கு பேரரசர் தலைமை தாங்குகிறார். கூட்டரசு பிரதேசங்களுக்கு பொறுப்பான அமைச்சர், அரசியலமைப்பு விதிகளின்படி வாரியத்தின் உறுப்பினராக இருப்பார். மன்னிப்பு வாரியம் ஒரு சுதந்திர அமைப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.