ஜன.11-
தேசியச் சேவைப் பயிற்சித் திட்டம் 3.0றின் பரிட்சார்த்த சோதனை நாளை தொடங்குகிறது. 2018 ஆம் ஆண்டு அகற்றப்பட்ட அத்திட்டம் கிட்டதட்ட ஏழாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அமலுக்கு வருகிறது. முதல் கட்டமாக கோலாலம்பூரில் உள்ள சேமப்படை ராணுவ முகாமொன்று பயன்படுத்தப்படுகிறது. நாளை முழுவதிலும் இருந்து 130க்கும் மேற்பட்ட தன்னார்வப் பங்கேற்பாளர்கள் அம்முகாமில் பதிந்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
18ட்டில் இருந்து 20 வயது வரையிலான அனைத்து பங்கேற்பாளர்களும் நாளை முதல் பிப்ரவரி 25 ஆம் தேதி வரை 45 நாட்களுக்கு ராணுவ மற்றும் தேசியப் பயிற்சிகளை மேற்கொள்வர். இம்முறை நான்கு கட்டங்களை உள்ளடக்கிய இரு முக்கிய அம்சங்களை இணைத்து பயிற்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பரிட்சார்த்த சோதனைக்குப் பிறகு மேலும் சில மையங்களில் அதே போன்று நடத்தப்படும் என தற்காப்பு அமைச்சர் Datuk Seri Mohamed Khaled Nordin கூறினார்.