4 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் கவனக்குறைவு, காவல் துறை தகவல்

ஜன.11-

Kuala Langat, Bandar Saujana Putraவில் இம்மாதத் தொடக்கத்தில் நான்கு மாத ஆண் சிசு மரணமடைந்த சம்பவத்தில் சிறார் பராமரிப்பு மையமொன்றில் வேலை செய்யும் பராபரிப்பாளர் கவனக் குறைவாகவும் அலட்சியமாகவும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. நீண்ட நேரமாக அந்த பராமரிப்பாளர் அக்குழந்தையைக் கவனிக்காமல் விட்டது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Kuala Langat மாவட்ட காவல் துறை தலைவர் Supt Akmalrizal Radzi தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பராமரிப்பாளர் உட்பட ஆறு பேரிடம் இருந்து இதுவரை வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சந்தேக நபரைக் கைது செய்யவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். மரணத்துக்கானக் காரணத்தைக் கண்டறிய ஆய்வுக்கூட முடிவுக்காகக் காவல் துறை இன்னும் காத்திருக்கிறது.

அந்த ஆண் சிசு உயிரிழந்த சம்பவத்தை அடுத்து சம்பந்தப்பட்ட சிறார் பராமரிப்பு மையத்தை மூட உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS