ஜன.11-
மாற்றுத் திறனாளிகளை வேலைக்கு அமர்த்துவதன் மூலம் தொழில் மானியத்தின் கீழ் அரசாங்கம் ஏற்படுத்தித் தந்துள்ள சலுகைகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு முதலாளிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். வெளிநாட்டு முதலாளிகளுக்கும் இது பொருந்தும் என துணைப் பிரதமர் Datuk Seri Dr. Ahmad Zahid Hamidi தெரிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு உடலில் ஊனம் இருந்தாலும், அவர்களால் சாதாரண தொழிலாளர்களுக்கு ஈடான உற்பத்தியை வழங்க முடியும் என்றாரவர்.
தொழில் மானியம் 3.0 திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளையும் முன்னாள் கைதிகளையும் பணியமர்த்தும் முதலாளிகளுக்கு மாதமொன்றுக்கு 600 ரிங்கில் ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படும். இது மூன்று மாதங்களுக்குக் கொடுக்கப்படும். PERKESOவின் மேற்பார்வையில் அது இருக்குமென 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.