ஜொகூரில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு

ஜன.11-

ஜொகூரில் ஐந்து மாவட்டங்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இன்று பிற்பகலில் நான்கு மாவட்டங்களில் ஆயிரத்து 291 பேர் 22 தற்காலிக மையங்களில் இருந்தனர். அவ்வெண்ணிக்கை இன்று மாலை ஆயிரத்து 786 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் 30 மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். Johor Bahru மாவட்டம் ஆகக் கடைசியாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் நிர்வாக செயற்குழு கூறியது.

Kota Tinggiயில் மிக அதிகமானோர் வெள்ளத்தில் அவதியுற்று வருகின்றனர். Kluang, Kulai, Pontian வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள பிற மாவட்டங்களாகும். அதே வேளை ஐந்து ஆறுகளின் நீர் மட்டம் அபாய நிலையிலேயே உள்ளது.

WATCH OUR LATEST NEWS