ஜன.11-
இந்த ஆண்டு 63 தனியார் சீனப் பள்ளிகளுக்கு 20 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இது தனியார் சீன பள்ளிகளின் சேவையை மதிப்பிடும் விதமாக செய்யப்பட்டுள்ளது என்றார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்.
பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது பள்ளி நாட்களை நினைவு கூர்ந்து, சீன மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளதால், சீன மொழியை கற்பது மலேசியாவிற்கு நன்மை பயக்கும் என்று அவர் கூறினார்.
மலாய் மொழியை தேசிய மொழியாக உயர்த்துவதோடு, சீன மொழி, ஆங்கில மொழி போன்ற உலகப் பொருளாதார மொழிகளின் தேர்ச்சியையும் அரசு வலியுறுத்துகிறது என்றார். இந்த நடவடிக்கை மலேசியாவை ஒரு முக்கிய பொருளாதார மண்டலமாக உயர்த்தும் என்று அவர் கூறினார்.