ஜன.11-
நஜிப் ரசாக் தனது மீதமுள்ள சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் கழிக்க அனுமதிக்கும்படி கூறும் கூடுதல் உத்தரவு குறித்து அரசு மறைக்கிறது என்ற சிலரின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார் பிரதமர் அன்வர் இப்ராஹிம்,
அந்த கூடுதல் உத்தரவு எனப்படும் கடிதம் தமக்கோ அல்லது கருணை ஆணைய உறுப்பினருக்கோ அல்ல, மாறாக சட்டத் துறைத் தலைவருக்கு அனுப்பப்பட்டது. சட்டத் துறைத் தலைவர், பேரரசர் மாறும்போது, அதை பேரரசரின் அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார். ஏனெனில் பேரரசர் அதற்கு தலைவர் என விளக்கமளித்தார் அன்வார்.
இதுதான் நிலைமை. நாங்கள் மறைக்கவில்லை. முன்னாள் பேரரசருக்கு சட்டத் துறைத் தலைவர் வழங்கிய ஆலோசனை என்னவென்றால், எந்த முடிவும் பேரரசின் இறுதி முடிவுதான். ஆனால் அது கருணை ஆணையக் கூட்டத்தில் எடுக்கப்படும் என்றார் அவர்.
இருப்பினும், நஜிப் இன்னும் பேரரசரிடம் மேல்முறையீடு செய்யலாம். எதிர்க்கட்சிகள் நஜிப்பை ஆதரித்து இந்த கூடுதல் உத்தரவு விவகாரத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துகின்றன எனப் பிரதமர் மேலும் சொன்னார்.