சமயம், கலை, கலாச்சாரம் , பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த திட்டங்களை மேற்கொள்கிறது

இந்து சமயம் தமிழ் மொழியை வாய்மொழியாகப் பேசுவது மட்டும் போதாது, செயலில் காட்ட வேண்டும் என்று டிஎஸ்கே குழுவின் தலைவரும் மஹிமா தலைவருமான டத்தோ சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார். டிஎஸ்கே குழுவானது இந்து சமயம், பாரம்பரியம் ஆகியவற்றை உட்படுத்தி பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறது. குறிப்பாக, குழந்தைகளுக்கு 2022 ஆம் ஆண்டு 110 மாணவர்களுடன் தேவார வகுப்பு தொடங்கப்பட்டது, இது பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த வரவேற்பின் காரணமாக, நேற்று தேவாரம், சமயம், பரதநாட்டியம், தவில் , நாதஸ்வரம் ஆகிய வகுப்புகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. இந்த வகுப்புகள் அனைத்தும் பத்துமலையில் புதிதாக திறக்கப்படவுள்ள இந்திய கலாச்சார மையத்தில் விரைவில் நடைபெற உள்ளதாக டத்தோ சிவக்குமார் தெரிவித்தார்.

டிஎஸ்கே குழுவானது நமது சமயம், கலை, கலாச்சாரம் , பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த திட்டங்களை மேற்கொள்கிறது. இது போன்ற ட்திட்டங்களின் மூலமே சமயத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க முடியும் என்று டத்தோ சிவக்குமார் குறிப்பிட்டார். இங்கு நடைபெறும் வகுப்புகளில் வயது வித்தியாசமின்றி அனைவரும் கலந்து கொள்ளலாம் என்றும், இந்த வகுப்புகள் அடுத்த மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS