2 மில்லியன் மதிப்புள்ள டிரேலர் உட்பட வரி செலுத்தாத 67 வகையான பொருட்கள் பறிமுதல்

ஜன 12

கூலிம் மாவட்ட BATALION 2 படையினர் நடத்திய சோதனையில், 8 இலட்சம் ரிங்கிட் மதிப்புள்ள ஒரு டிரெய்லரோடு 1.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வரி செலுத்தாத 67 வகையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த சோதனையானது சுங்கைப்பட்டாணியில் உள்ள PETRONAS பெட்ரோல் நிலையத்தில் மதியம் 3.30 மணியளவில் நடத்தப்பட்டது. டிரெய்லரில் பல்வேறு வகையான வரி செலுத்தாத பொருட்கள் பெரிய பிளாஸ்டிக் பொட்டலங்களில் இருந்தன.

டிரெய்லர் ஓட்டுநர் பொருட்களுக்கான வரி செலுத்திய ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறியதால், அனைத்து பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு சுங்கைப்பட்டாணி சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. 49 வயது டிரெய்லர் ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் உணவுப் பொட்டலங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், மோட்டார் சைக்கிள் பாகங்கள், துணிகள், காலணிகள் ஆகியவை அடங்கும். பொருட்களை ஏற்றி வந்த டிரெய்லரின் மதிப்பு 8 லட்சம் ரிங்கிட். மொத்த பறிமுதல் மதிப்பு 20 இலட்சத்து ஆயிரத்து 196 ரிங்கிட் ஆகும். இந்த சம்பவம் சுங்கத்துறை சட்டம் 1967 இன் பிரிவு 135(1)(D) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS