ஜன 12
Tanjung Dawaiயில் ஏற்பட்டத் தீ விபத்தில் வீடுகளை இழந்த 16 குடும்பங்களுக்கு பிரதமர் சார்பில் 80 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த நிதியை பிரதமரின் அரசியல் செயலாளர் Muhammad Kamil Abdul Munim பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர்களிடம் வழங்கினார். பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிகமாக Choong Chengங் சீனப் பள்ளியின் தற்காலிக இடமாற்ற மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிதியுதவி பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தற்காலிக தங்குமிடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் புதிய இடங்களில் குடியேறும் வரை தற்காலிக இடமாற்ற மையத்திலேயே தங்கியிருப்பார்கள் என்றும், புதிய தங்குமிடங்களைக் கண்டறிய குடியிருப்பாளர் குழுக்களுடன் இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.