ஜன 12
மலேசிய வானிலை ஆய்வுத் துறையான MetMalaysia வின் கணிப்பின்படி, தீபகற்ப மலேசியா, சபா, சரவாக்கின் சில பகுதிகளில் வரும் புதன்கிழமை முதல் ஜனவரி 18 வரை பலத்த மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளார் அதன் தலைவர் Mohd Hisham Mohd Anip வ் பருவமழை காரணமாக இந்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் MetMalaysia வின் அதிகாரப்பூர்வ தகவல்களைப் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
தற்போது ஜோகூர், பேரா ஆகிய இரண்டு மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஜோகூரில் 3,779 பேரும், பேரா மாநிலத்தில் 31 பேரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களிலும் வெள்ள நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.