ஜன 12
உலகத் தொன்மொழிகளில் முதன்மையான தமிழ் மொழியை உருவாக்கிய தமிழர்களுக்கு, திருவள்ளுவர் ஆண்டு 2056 தை முதல் நாளில் பிறக்கவுள்ளதை முன்னிட்டு, கோலாலம்பூர் தோட்டமாளீகையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே படைபலத்தோடு விளங்கிய தமிழ் நாட்டிலிருந்து வந்த ராஜேந்திர சோழன், மலேசியாவின் வட பகுதியான கடாரத்தில் ஆட்சி அமைத்தார். பல்வேறு காரணங்களால் தமிழர்களுக்கு ஒரு தொடர்ச்சியான ஆண்டுக் கணக்கு இல்லாமல் போனாலும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டை தொடராண்டாகக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.
மலேசியத் தமிழர் தன்மானப் பேரவைத் தலைவர் முனைவர் பெரு. அ.தமிழ்மணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், டான்ஸ்ரீ க. குமரன், இரெ.சு.முத்தையா, நாக.பஞ்சு உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, 2056 தமிழ்ப் புத்தாண்டையும் பொங்கலையும் வரவேற்றனர். மேலும், தமிழ்ப் புத்தாண்டு, தமிழர் ஒற்றுமை குறித்து தலைவர்கள் உரையாற்றினர். நிகழ்ச்சியின் இறுதியில் பொங்கல் பரிமாறப்பட்டது.