2025 ஆம் ஆண்டில் மலேசியப் பொருளாதாரம் 5 விழுக்காட்டுக்கும் அதிகமான – நிலையான வளர்ச்சியைப் பெறும் என்று இரண்டாம் நிதி அமைச்சர் Amir Hamzah Azizan நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெளிநாட்டு நேரடி முதலீடு வலுவாக இருப்பதால், மலேசியா நல்ல பொருளாதார அடித்தளத்தைக் கொண்டுள்ளது என்றும், உலகச் சந்தையில் நிலையற்ற தன்மை நிலவி வந்தாலும், அதை எதிர்கொள்ளும் திறன் மலேசியாவுக்கு உள்ளது என்றும் அவர் கூறினார். மேலும், மலேசியா ஒரு திறந்த வர்த்தக நாடாகத் தொடர்ந்து செயல்படும் என்றும், அனைத்து நாடுகளும் பங்கேற்கும் வகையில் திறந்த சந்தையை ஆதரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரிங்கிட்டின் மதிப்பு 2024 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 3 விழுக்காடு உயர்ந்துள்ளது, இது ஆசியாவின் சிறந்த நாணயங்களில் ஒன்றாக உள்ளது. இது வலுவான வெளிநாட்டு முதலீட்டு வரவு, உள்நாட்டு முதலீடு , அரசு முதலீட்டு நிறுவனங்களின் ஆதரவால் நிகழ்ந்தது என்று அமீர் ஹம்சா விளக்கினார். மலேசியாவின் பொருளாதாரம் பல்வேறு துறைகளில் வலிமையாக இருப்பதால், எந்த சவாலையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டது என்றும் அவர் கூறினார்.