14 பேர் Maritim Malaysiaவால் காப்பாற்றப்பட்டனர்

ஜன 12

இன்று காலை Tanjung Piaiக்கு அருகில் ஒரு டேங்கர் கப்பல் தீப்பிடித்ததில் 14 பேர் Maritim Malaysiaவால் காப்பாற்றப்பட்டனர். மங்கோலியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பலில் மியான்மர், இந்தோனேசியா , சிங்கப்பூரைச் சேர்ந்த 15 ஊழியர்கள் இருந்தனர். மீட்பு நடவடிக்கை காலை 9.25 மணிக்கு தொடங்கப்பட்டது என Maritim Malaysia வின் ஜோகூர் மாநில இடைக்கால இயக்குநர் Kapten Kama Azri Kamil தெரிவித்தார்.

14 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டாலும், இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவர் சிங்கப்பூர் கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டார். பின்னர் அவர் சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS