ஜன.15-
“magic mushroom” என அழைக்கப்படும் மின்-சிகரெட் திரவத்தில் காணப்படும் போதைப்பொருள் செயற்கை கஞ்சாவிலிருந்து தயாரிக்கப்படுகிறது என தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிறுவனமான AADK கண்டறிந்துள்ளது. கடந்த ஆண்டில், இந்த போதைப்பொருளை பயன்படுத்துவதாகக் கூறிய 50 மாதிரிகளை சோதனை செய்ததில் இது தெரிய வந்துள்ளது எனக் குறிப்பிட்டார் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் Datuk Ruslin Jusoh. இளைஞர்களிடையே இந்தப் போதைப்பொருள் பிரபலமாக இருப்பதற்கு ” magic mushroom ” என்ற பரவலான பயன்பாடே காரணம் என அவர் தெரிவித்துள்ளார். உண்மையில் இது கஞ்சா அல்ல, மாறாக திரவ வடிவில் வேப்பில் பயன்படுத்தப்படும் செயற்கை கஞ்சா என ஆய்வுகள் கூறுகின்றன என்றார்.
செயற்கை போதைப்பொருட்கள் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிப்பதில் AADK-க்கு சவாலாகவும் உள்ளது. இளைஞர்களிடையே இதன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. மேலும், ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தில் சமீபத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள், போதைப்பொருள் பழக்கத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் AADK-க்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கியுள்ளதாகவும் Ruslin Jusoh கூறினார்.