ஜன.15-
யுனைடெட் கிங்டமிற்கு ஐந்து நாள் அலுவல் பயணத்தை மேற்கொண்டு, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று புதன்கிழமை லண்டன் வந்து சேர்ந்தார்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மலேசியாவின் நான்காவது மிகப்பெரிய வர்த்தக சகாவாக யுனைடெட் கிங்டம் விளங்குகிறது.
ஐக்கிய அரபு சிற்றரசுக்கான மூன்று நாள் அதிகாரத்துவப் பயணத்தை முடித்துக்கொண்ட பின்னர் அபுதாபியிலிருந்து யுனைடெட் கிங்டமிற்கு பிரதமர் மேற்கொண்ட இப்பயணத்தில், அவரின் விமானம், மலேசிய நேரப்படி இன்று புதன்கிழமை காலை 6.50 மணியளவில் Stansted விமான நிலையத்தில் தரையிறங்கியது.
பிரதமரை யுடைடெட் கிங்டமிற்கான மலேசியத் தூதர் டத்தோ ஸக்ரி ஜப்பார் வரவேற்றார்.