தகுதியான மலேசியர்களுக்கு மட்டுமே கிடைப்பதை உறுதி செய்ய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது

ஜன.15-

மானிய விலையில் விற்கப்படும் பாக்கெட் சமையல் எண்ணெய் தகுதியான மலேசியர்களுக்கு மட்டுமே கிடைப்பதை உறுதி செய்ய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று உள்நாட்டு வர்த்தக, வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் Fuziah Salleh தெரிவித்தார். வெளிநாட்டினரும் வியாபாரிகளும் பாக்கெட் எண்ணெயை வாங்குவதைத் தடுக்கும் வகையில், புதிய விநியோக வழிமுறைகள் உருவாக்கப்படுகின்றன. தற்போதைய வழிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மலேசிய பயனீட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான Fomca , பாக்கேட் எண்ணெய் விற்பனையில் முறைகேடுகளைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியதை அடுத்து துணை அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். ஊடக அறிக்கைகளின்படி, மானியப் பொருட்களை வாங்குவதற்கு சிறப்பு அடையாள அட்டை முறை அல்லது மானியத்தை இரத்து செய்துவிட்டு நேரடி நிதி உதவி வழங்குவது போன்ற முன்மொழிவுகள் பரிசீலிக்கப்படுகின்றன. சமீபத்தில், பேரா, பகாங் ஆகிய மாநிலங்களில் உள்ள வணிக வளாகங்களில் பாக்கேட் எண்ணெய் முறைகேடாக விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS