மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம்மின் UNITED KINGDOMக்கான 6 நாட்கள் பயணம் இரு வழி உறவை மேலும் வலுப்படுத்தும் என நம்பிக்கை

ஜன.15-

ஜனவரி 14 முதல் 19 வரை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் UNITED KINGDOMஇற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்கிறார். இது அவரது UNITED KINGDOMஇற்கான முதல் வருகையாகும், அங்கு அவர் UNITED KINGDOM பிரதமர் Sir Keir Starmerரை சந்தித்து இருதரப்பு உறவுகள், வர்த்தகம், முதலீடு, கல்வி, காலநிலை மாற்றம், ASEAN ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார். அவருடன் முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் Senator Tengku Datuk Seri Utama Zafrul Tengku Abdul Aziz, உயர்க்கல்வி அமைச்சர் Senator Dato’ Seri Diraja Dr. Zambry Abdul Kadir, தோட்டத்துறை, மூலப்பொருள் அமஒச்சர் Datuk Seri Johari Abdul Ghani, ஆகியோரும் சென்றுள்ளதாக விஸ்மா புத்ரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது..

இந்த வருகையின்போது, இரு நாட்டுப் பிரதமர்களும் மலேசியா-UNITED KINGDOM உறவுகளை வலுப்படுத்துவதுடன், வட்டார, அனைத்துலக விவகாரங்கள் குறித்து விவாதிப்பார்கள். House of Commons சபாநாயகர் Sir Lindsay Hoyle உடனும் தொழில்துறைத் தலைவர்கள்துடனும் சந்திப்பை மேற்கொள்ள இருக்கிறார் பிரதமர் அன்வார் இப்ராஹிம். London School of Economics இல் மலேசிய அரங்கம் திறப்பு விழாவிலும் புலம்பெயர்ந்த மலேசியர்களுடனான சந்திப்பிலும் அவர் கலந்து கொள்வார்.

மலேசியா – UNITED KINGDOMக்கு இடையேயான வர்த்தக உறவுகள் வலுவாக உள்ளன, மேலும் இந்த பயணம் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில், UNITED KINGDOMஆனது மலேசியாவின் முக்கிய வர்த்தகப் பங்காளியாக இருந்தது. இந்த பயணத்தின் முடிவில், பிரதமர் பி Brusselsக்கு அடுத்த பணி பயணத்திற்காகப் புறப்படுவார்.

WATCH OUR LATEST NEWS