MRSM பள்ளிகளில் இதுபோன்ற குத்தகையாளர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

ஜன.15-

பள்ளிகளில் குத்தகையாளர்களின் முறைகேடுகளும் தவறுகளும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு கடுமையான கல்வி குற்றமாகும் என்று Yayasan Sinar Untuk Malaysia அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி Norhayati Nordin தெரிவித்துள்ளார். குத்தகையாளர்கள் சரியான நடைமுறைகளைப் பின்பற்றாததால், திட்டங்களின் தரம் கேள்விக்குறியாகிறது என்றும், இது மாணவர்களின் பாதுகாப்பை பாதிக்கும் என்றும் அவர் கூறினார். குறிப்பாக, MRSM பள்ளிகளில் இதுபோன்ற குத்தகையாளர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றார் அவர்.

இந்த குத்தகையாளர்களைக் கண்காணிக்க மூன்றாம் தரப்பினரின் பங்களிப்புடன் அவ்வப்போது கண்காணிப்பு அவசியம் என்றும், கொள்முதல் செயல்முறையை வெளிப்படையாகவும், கசிவுகள் இல்லாமலும் வைத்திருக்க இது உதவும் என்றும் Norhayati வலியுறுத்தினார். இந்த குத்தகையாளர்கள் MRSM பள்ளிகளில் மட்டுமின்றி மற்ற பள்ளிகளிலும் இருக்க வாய்ப்புள்ளது என்றும், எனவே அனைத்து பள்ளிகளிலும் இவர்களின் செயல்முறைகளை முறையாக கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS