ஜன.15-
MAHB பங்குகளில் மேற்கொள்ளப்படும் வர்த்தக நடவடிக்கைகள் உட்பட, அதன் முதலீட்டு முடிவுகள் அனைத்தும் உறுப்பினர்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் விரிவான ஆய்வுகளின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றன என்று ஊழியர் சேமநிதி வாரியம் தெரிவித்துள்ளது. ஈவுத்தொகை வழங்குவதற்கான வருவாயை ஈட்டுவதும், நீண்டகால முதலீட்டு நோக்கங்களை அடைவதும் இந்த நடவடிக்கைகளின் முக்கிய குறிக்கோளாகும். ஒரு பங்கிற்கு 11 ரிங்கிட் என்ற விலையில் MAHB பங்குகளை வாங்குவதற்கானத் தற்போதையப் பொது சலுகை, KWSP இன் நீண்டகால வளர்ச்சிக்கும் நிலையான வருவாய் ஈட்டும் முயற்சிக்குமான ஒரு பகுதியாகும் என அண்மையில் ஊழியர் சேமநிதி வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.